இளநீரில் எலக்ட்ரோலைட் என்ற கலவை உள்ளது. நார்ச்சத்துக்கள், விட்டமின் சி மற்றும் பல அத்தியாவசியமான தாதுக்கள் உள்ளன.
ஆரோக்கிய பானமான இளநீர் நமக்கு ஏராளமான நன்மைகளை அளித்தாலும் அளவிற்கு அதிகமாக குடிப்பது தீமையை கொடுக்கும்.
அதிகப்படியான இளநீரை குடிப்பது செரிமான அமைப்பில் பாதிப்புகளை உண்டாக்குகிறது.
இளநீரில் அதிகப்படியான சர்க்கரை உள்ளது. ஒரு கப் இளநீரில் 6.26 கிராம் அளவிற்கு சர்க்கரை காணப்படுகிறது. எனவே ரத்த சர்க்கரை அதிகம் இருப்பவர்கள் தினமும் குடிக்க கூடாது.
ஒரு கப் இளநீரில் 252 மி.கி சோடியம் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் தினமும் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இளநீரை அதிகமாக குடிப்பதால் ஹைபர்கலேமியா ஏற்படலாம். ஹைபர்கலீமியா என்பது பலவீனம், நினைவு இழப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
ஒவ்வாமை இருப்பவர்களுக்கு அதிகப்படியான இளநீர் பலவித பிரச்சினைகளை உண்டாக்கும். அழற்சியை ஏற்படுத்தி பலவித நோய்த்தொற்றுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
இளநீரில் கலோரிகள் அதிகம். 11 அவுன்ஸ் இளநீரில் 60 கலோரிகள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இதனை தினமும் அருந்துவது எடையை அதிகரிக்கலாம்.
இளநீரில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது. இது இயற்கையான டையூரிடிக் ஆக செயல்படுகிறது. இது சிறுநீரகத்திற்கு கடுமையான வேலையை கொடுக்கிறது.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.