கூகுளின் பிரபலமான சேவைகளில் ஒன்று ஜிமெயில் ஆகும். இது நிறுத்தப்பட போகிறது என்ற செய்தி தற்போது பரவலாக பேசபட்டு வருகிறது.
உலகளவில் மில்லியன் கணக்கானவர்கள் கூகுள் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆண்ட்ராய்டு போன்கள் இயக்க ஜிமெயில் முக்கியமான ஒன்றாக உள்ளது.
பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை தான் ஜிமெயில் நீக்கி வந்தது.
இந்த ஆண்டின் இறுதியில் ஜிமெயில் தன் சேவையை நிறுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
ஜிமெயில் லெட்டர்பேடில் இந்த தகவல் வெளியானது போல் புகைப்படம் வைரலானது.
இதனால் இது உண்மை என்று பலரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
இந்நிலையில், ஜிமெயில் இது போலி என்பதை தற்போது தெளிவு படுத்தி உள்ளது.