திமுகவின் 'டார்கெட் 40': ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகள்!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை துரிதப்படுத்தியிருக்கிறது திமுக
2019 தேர்தலைப் போலவே தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் கைப்பற்ற திட்டம்
புதுச்சேரி மாநிலத்திலும் திமுக கூட்டணியே வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறது திமுக
கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை விரைவாக முடித்து வேட்பாளர்களை அறிவிக்க ஆயத்தமாகியுள்ளது.
இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியை ஒதுக்கியது திமுக
அடுத்து மதிமுக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐ(எம்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பங்கீட்டை முடிக்க திமுக ஆயத்தம்.
காங்கிரஸூக்கு கடந்த முறையைவிட குறைவாக தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு. அதனை ஏற்க காங்கிரஸ் தயக்கம்
4 சீட் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது விசிக. இல்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க தயார் என திருமாவளவன் அறிவிப்பு
இதனால் குழப்பத்தில் இருக்கும் திமுக, காங்கிரஸ் தொகுதிகளை முடிவு செய்த பிறகு விசிகவுடன் இறுதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவு
அடுத்த வார இறுதிக்குள் வேட்பாளர்களை அறிவிக்க திமுக முடிவு. உடனடியாக பிரச்சாரத்தை தொடங்கவும் கட்சியினருக்கு அறிவுறுத்தல்
இதனால் 40 தொகுதிகளையும் கைப்பற்ற முடியும் என கணக்கு போடுகிறது திமுக. ஆனால் வியூகம் பலிக்குமா?