கூகுள் பே செயலியைதான் இந்தியாவில் பலரும் UPI பரிவர்த்தனைக்கு பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும், பலருக்கும் அதில் ஒருவரை பிளாக் செய்ய வசதி இருப்பதே தெரியாது.
உங்களுக்கு யாரையாவது பிளாக் செய்ய வேண்டும் என்றால், இதில் பின்வருபவற்றை செய்யுங்கள்.
முதலில் கூகுள் பே செயலியை திறந்துகொள்ளவும்.
அதில் Pay Contacts ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
அதன் கீழ் உங்களிடம் உள்ள தொடர்பு எண்கள் (Contacts) இருப்பதை பார்க்கலாம்.
அதில் யாரை நீங்கள் பிளாக் செய்ய வேண்டுமோ அவரின் நம்பரை தேர்வு செய்யவும்.
அதில் மேல் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால், அதில், வரும் Block This Person ஆப்ஷனை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்.