எலக்டிரிக் காருக்கு என்ஜின் ஆயில் வேண்டுமா?
தற்போது எலெக்ட்ரிக் கார்கள் பிரபலமடைந்து வருகின்றன. பலர் ஆர்வமுடன் அவற்றை வாங்க முன்வருகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப கார் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய புதிய மின்சார கார்களை அறிமுகம் செய்கின்றன.
இந்தக் கார்களை வாங்குபவர்களுக்கு அவற்றைப் பராமரிப்பது குறித்து பல கேள்விகள் எழுகின்றன.
பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் காரைப்போல, எலெக்ட்ரிக் காரிலும் எஞ்சின் ஆயில் ஊற்ற வேண்டுமா எனக் கேள்வி எழுகிறது.
மின்சார கார்கள் மின்சார எஞ்சினை (EV) பயன்படுத்துகின்றன. இவை பெட்ரோலில் இயங்கும் கார்களின் ICE எஞ்சின்களில் இருந்து வேறுபட்டவை.
ஒரு ICE எஞ்சின் பல்வேறு பகுதிகளைக் கொண்டது. அவை அனைத்தும் ஒன்றாகச் செயல்பட்டு காரை நகர்த்தச் செய்ய வேண்டும்.
ஆனால் மின்சார் கார்களில் உள்ள மோட்டார்களில் பல பாகங்கள் இருப்பதில்லை. அதனால்தான் எலக்ட்ரிக் கார் எஞ்சினுக்கு ஆயில் தேவையில்லை.
பெட்ரோல் டீசலில் இயங்கும் காரைப் போல எலெக்ட்ரிக் காருக்கு எஞ்சின் ஆயில் மாற்றத் தேவையில்லை