Ringing Bells என்ற நிறுவனம் உலகின் மிகவும் மலிவான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
The Freedom 251 என்ற மொபைல் 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
251 ரூபாய்க்கு விற்கப்பட்ட மொபைல் அறிமுகச் சலுகை என்றும், 500 ரூபாய்தான் அதன் உண்மையான விலை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மொபைலின் முன்பதிவின் போது, தங்கள் இணையதளமே முடங்கிப்போனதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் மோஹித் கோயல் தெரிவித்தார்.
பின்னர், அந்த மொபைல் வெறும் சீன தயாரிப்பிலான மொபைல் என்றும் அதில் Freedom 251 என்ற லோகோவை மட்டுமே ஒட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அறிமுகச் சலுகைக்கு பின், அந்த மொபைல் முன்பதிவு செய்த யாருக்குமே டெலிவரி ஆகவில்லை. அந்த நிறுவனம் முன்பதிவு தொகையை திருப்பி தருவதாக அறிவித்தது.
அதன் பின் இந்த மோசடிக்கு பின் இருந்த மோஹித் கோயல் கைது செய்யப்பட்டார்.