காருக்குள் ஏசி போட்டு தூங்கலாமா?
டாக்ஸி ஓட்டுனர்கள், கார்களில் ஏசியை போட்டுவிட்டு அப்படியே தூங்கி விடுகின்றனர். இப்பழக்கம் நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
இதனால் மூச்சுத் திணறல் வரும் அபாயம் அதிகமாக உள்ளது என ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் எத்தரித்துள்ளனர்.
ஏசி ஒரு எலக்ட்ரானிக் இயந்திரம். ஆதலால், இதனை அனைவரும் கவனமுடன் கையாள வேண்டியது அவசியமாகும்.
கார் என்ஜின் இயக்கத்தில் இருக்கையில் வெளிப்படும் புகையில் கார்பன் மோனாக்ஸைடு கலந்திருக்கும்.
இவ்வாறு வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்ஸைடு, காரின் அடிப்பகுதியின் வழியாக உள்ளே நுழைய அதிக வாய்ப்புள்ளது.
காருக்குள்ளே வருகின்ற கார்பன் மோனாக்ஸைடை நாம் சுவாசித்தால், இரத்தத்தில் இருக்கும் திசுக்களுக்கு ஆக்ஸிஜனின் அளவு குறைவாகக் கிடைக்கும்.
இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அது உயிரைப் பறிக்கும் எமனாக மாறி விடும்.
காரில் ஏசியை ஆன் செய்து தூங்குவதாக இருந்தால், வெளியில் இருந்து காற்று சிறிதளவு உள்ளே வருகின்ற வகையில் கண்ணாடியை சற்று இறக்கி வைக்க வேண்டும்.
வெளியில் இருந்து காற்று உள்ளே வரும் போது, கார்பன் மோனாக்ஸைடினால் உண்டாகும் நச்சுப் பாதிப்பு சற்றேனும் குறையும். மேலும், நிறுத்தப்பட்டுள்ள காரில் ஏசியைப் பயன்படுத்தும் போது ‘ரீ சர்குலேஷன் மோடில்’ வைப்பதை தவிர்த்து விட வேண்டும்.