அமெரிக்காவில் 4 வயதான சிறுவன் அலெக்ஸுக்கு நீண்ட காலமாகப் பல் வலி இருந்துள்ளது.
தினமும் பல் வலியால் அந்த சிறுவன் அலெக்ஸ் துடிதுடித்துப் போய் இருக்கிறான்.
இதனால் அவனது தாயார் எப்போதும் அவனுக்கு மோட்ரின் என்ற வலி நிவாரண மருந்தைத் தருவாராம்.
பல் வலியால் அலெக்ஸ் அலறி துடிக்கும் நிலையில், இந்த மோட்ரின் என்ற வலி நிவாரண மாத்திரையைச் சாப்பிட்டால் மட்டுமே அவன் நார்மல் ஆவானாம்.
கொரோனா காலத்தில் சிறுவனுக்கு இந்த பல் வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அலெக்ஸ் தனது மகனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
பல மருத்துவரிடம் சென்றாலும் என்ன பாதிப்பு என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இடைப்பட்ட காலத்தில் பல் வலியுடன் மற்றொரு பிரச்சினையும் வந்துவிட்டது. அதாவது அலெக்ஸ் வளரவில்லை.
சில காலமாகவே அவன் எடை மற்றும் உயரத்தில் எந்தவொரு வளர்ச்சியும் இல்லை. இதனை கவனித்த அவர்கள் மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர்.
அவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அதன் பக்க விளைவுகளாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து சாட்ஜிபிடிக்கு அலெக்ஸின் தாய் என்ன பிரச்சனை என சாட்ஜிபிடியிம் கேட்டுள்ளார்.
அலெக்ஸுக்கு டெதர்ட் கார்டு சிண்ட்ரோம் எனப்படும் அரிய நரம்பியல் நோய் என சாட்ஜிபிடி தெரிவித்துள்ளது.
அலெக்ஸின் எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட் அனைத்தையும் அவர் சாட்ஜிபிடியில் பதிவிட்டுள்ளார். மேலும், அவன் வெளிப்படுத்தும் அறிகுறிகளையும் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது தான் சாட்ஜிபிடி இதைத் தெரிவித்துள்ளது. இருப்பினும், முதலில் இதை அவரால் நம்பவே முடியவில்லை.
இதை உறுதி செய்ய அவர் தனது மகனை நரம்பியல் மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு இப்போது அறுவை சிகிச்சை நடந்து உடல்நிலை நன்றாக இருக்கிறதாம்