பெஸ்ட் கேமரா போன்கள் பட்ஜெட் விலையில்..!
25 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில், தரமான கேமரா வசதியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள்
Realme 11x 5G மாடலின் தொடக்க விலை 14 ஆயிரத்து 999 ரூபாயாகும். 64-மெகாபிக்சல் AI கேமரா, 2X இன்-சென்சார் ஜூம் மற்றும் ஹைப்பர்ஷாட் இமேஜிங் கொண்டுள்ளது.
Motorola Moto G54 5G மாடலின் தொடக்க விலை 15 ஆயிரத்து 999 ரூபாயாக உள்ளது. இதன் 50 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ்+ 8 மெகாபிக்சல் கான்ஃபிகிரேஷன் ஸ்டைலான தோற்றத்தைக் கொண்டுள்ளது. கூடுதலாக, முன் கேமரா 16 மெகாபிக்சல் தெளிவுத்திறனில் வருகிறது.
Samsung Galaxy F34 5G மாடலின் விலை 18 ஆயிரத்து 999 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இதில் 50 மெகாபிக்சல்கள் + 8 மெகாபிக்சல்கள் + 2 மெகாபிக்சல்கள் என மூன்று கேமராக்கள் பின்புறத்திலும், 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.
Vivo நிறுவனத்தின் T2 Pro 5G மாடலின் தொடக்க விலை 23 ஆயிரத்து 999 ரூபாயாக உள்ளது. 64-மெகாபிக்சல்+2-மெகாபிக்சல் கான்ஃபிகிரேஷன் மற்றும் 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா என இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
OnePlus நிறுவனத்தின் Nord CE 2 Lite 5G மாடலின் தொடக்க விலை 16 ஆயிரத்து 399 ரூபாயாக உள்ளது. EIS உடன் 64MP பிரதான கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் மற்றொரு 2MP மேக்ரோ லென்ஸ் அமைப்பு உள்ளது. செல்ஃபிக்களுக்கு, 16MP Sony IMX471 சென்சார் உள்ளது.
Xiaomi Redmi Note 12 Pro 5G மாடலின் தொடக்க விலை 23 ஆயிரத்து 999 ரூபாயாக உள்ளது. இதில் 50 மெகாபிக்சல்கள் + 8 மெகாபிக்சல்கள் + 2 மெகாபிக்சல்கள் உட்பட மூன்று கேமரா அமைப்பு உள்ளது. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Vivo நிறுவனத்தின் Y100A மாடலின் தொடக்க விலை 24 ஆயிரத்து 999 ரூபாய். டிரிபிள் கேமரா அமைப்பில் 64-மெகாபிக்சல் பிரைமரி லென்ஸுடன் பிரமிக்க வைக்கும் வகையில் விரிவான புகைப்படங்களைப் பிடிக்கிறது . இரண்டு 2-மெகாபிக்சல் லென்ஸ்களும் இடம்பெற்றுள்ளன. செல்ஃபிக்காக 16-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.