பஜாஜ் பல்சர் N150 மற்றும் N160 என்ற மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு பைக்குகளும் புதிய வண்ணங்கள் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது.
இது புளூடூத் இணைப்புடன் கூடிய டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்களை கொண்டுள்ளது.
இந்த வசதி மூலம் வாகன உரிமையாளர் ஸ்மார்ட்போனை பைக்குடன் இணைத்து கொள்ளலாம்.
இதன் மூலம் கால்கள் மற்றும் மெசேஜ்களை வாகனம் ஓட்டுபவர் பார்த்து கொள்ள முடியும்.
இரண்டு மாடல்களின் விலையும் ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.33 லட்சம் வரை இருக்கும்.
பல்சர் N150 ஆனது 164.82சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர், ஆயில்-கூல்டு மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது.
149சிசி சிங்கிள் சிலிண்டர் மற்றும் ஏர்/ஆயில்-கூல்டு இன்ஜின் பல்சர் N150 க்கு சக்தி அளிக்கிறது.
இந்த இரண்டு பைக்குகளிலும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.