மிகப் பெரிய மால்கள் முதல் சாலையோர கடைகளிலும் கூட யூபிஐ பயன்படுத்தப்படுகிறது. இதிலும் மோசடி நடக்கிறது
வாங்கிய பொருளுக்கு பணம் செலுத்துவது சுலபமாகிவிட்டதைப் போலவே ஏமாறுவதும் எளிதாகிவிட்டது. எனவே ஏமாற்றப்படாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும்
எவ்வாறு யூபிஐ மோசடியை அடையாளம் கண்டுகொள்வது மற்றும் தவிர்ப்பது என்பதை தெரிந்துக் கொள்வோம்
உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், UPI பின், OTP போன்ற உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சிப்பார்கள். இந்த தகவல் கிடைத்தால் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கிறார்கள்.
அதிர்ஷ்டக் குலுக்கல்லில் வெற்றி பெற்றதாகவும், ஆயிரக்கணக்கான ரூபாய் தருவதாக கூறி ஆசைகாட்டி மோசம் செய்பவர்கள், சில தகவல்களை கேட்பார்கள். அப்போது நாசூக்காக உங்கள் தகவல்களை பெற்று மோசடி செய்வார்கள்
தங்களுக்கு வர வேண்டிய பணம் தவறுதலாக உங்கள் கணக்குக்கு வந்துவிட்டதாக சொல்லி, அது தொடர்பாக பேசி சாமர்த்தியமாக உங்கள் கணக்கு தொடர்பான தகவல்களைப் எற்று பணமோசடி செய்யலாம்
மோசடி செய்பவர்கள் போலியான UPI செயலிகளை வைத்திருப்பார்கள். QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது பணம் செலுத்தப்பட்டதாகத் தோன்றும். ஆனால் இதிலும் நூதனமாக மோசடி நடைபெறுகிறது
UPI ஐப் பயன்படுத்தும் போதெல்லாம், நீங்கள் எவ்வளவு பணம் அனுப்புகிறீர்கள் என்பதையும் சரியான நபருக்கு அனுப்புகிறீர்களா என்பதையும் சரிபார்க்கவும். உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், பின் அல்லது OTP போன்ற தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம்.
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது