பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பாஜக தேர்தலை சந்தித்தது. மோடிக்கு பெரும் ஆதரவு அலையும் இருந்தது.
இருப்பினும், தமிழ்நாட்டில் அப்போதைய ஆளும் அதிமுகவின் முதலமைச்சர் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட முடிவெடுத்தார்.
அதிமுக தனித்து 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது. 37 தொகுதிகளில் வென்றது.
காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டு 39 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் மக்களவை தேர்தலை சந்தித்தன.
திமுக - 34, விசிக - 2, மமக - 1, இயூமுலீ- 1, புதிய தமிழகம் - 1
தேமுதிக - 14, பாமக - 8, பாஜக - 7, மதிமுக - 7, இன்றைய ஜனநாயக கட்சி - 1, கேஎம்டிகே - 1, புதிய நீதி கட்சி - 1