மநீம கட்சியை கண்டுகொள்ளாத திமுக - அப்செட்டில் கமல்..!
நாடாளுமன்ற தேர்தல் 2024 கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு மநீம கட்சியை திமுக இதுவரை அழைக்கவில்லை.
அண்மையில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல்ஹாசன் ஓரிரு நாளில் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்றார்.
திமுக தங்களை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் அவரை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு இதுவரை அழைக்காமல் இருக்கிறது திமுக
மநீம கட்சிக்கு ஒரு சீட் கிடைக்கும் என கமல் எதிர்பார்த்தார். ஆனால் திமுக திமுக, நீங்கள் ஆதரவு மட்டும் கொடுத்தால் போதும் என்ற சொல்லிவிட்டதாம்
சீட் எல்லாம் எதிர்பார்க்காதீர்கள் என்றும் கூறிவிட்டதாம். இதனால் கமல்ஹாசன் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
வேண்டுமென்றால் காங்கிரஸூக்கு ஒதுக்கப்படும் சீட்டில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் திமுக ஐடியா கொடுத்திருக்கிறதாம்.
இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டோமே என, என்ன செய்வது என குழப்பத்தில் இருக்கிறாராம் கமல்ஹாசன்.