எதிர்காலம் சிறப்பா இருக்க பெண்கள் செய்ய வேண்டியது?

S.Karthikeyan
Feb 28,2024
';

சரியான முடிவு

பெண்கள் நிதிசார்ந்த முடிவுகள் எடுப்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து நிதி சார்ந்த வளர்ச்சியை அடையலாம்.

';

நிதி கல்வி:

பெண்கள் தங்கள் நிதி நுண்ணறிவை மேம்படுத்துவது அவசியம் .பெண்கள் வரவு செலவு திட்டம், முதலீடுகள், கடன் மேலாண்மை போன்றவற்றை புரிந்து கொண்டு திட்டமிட வேண்டும்.

';

வேலை வாய்ப்பு

சரியான வேலை வாய்ப்பு பாதையை தேர்வு செய்வது நிதி சுதந்திரத்தை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் தங்களது திறமைகளுக்கு ஏற்றவாறு தொழில்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

';

சேமிப்பு பழக்கம்:

அவசரகால நிதியை உருவாக்குதல், ஓய்வூதிய திட்டங்களுக்கு பங்களிப்பு செய்தல், வருமானத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்தல் எல்லோருக்கும் அவசியம். இதில் பெண்கள் கவனம் செலுத்துங்கள்.

';

மியூச்சுவல் ஃபண்டுகள்:

முதலீடு செய்வதில் புதியவர்களாக இருக்கும் பெண்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. எஸ்ஐபி போன்ற முறையான முதலீட்டு திட்டங்களில் பெண்கள் சிறு தொகைகளுடன் தொடர்ந்து முதலீடு செய்ய தொடங்கலாம்.

';

தொழில்முனைவோர்:

தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை பெண்கள் கட்டாயம் முன்னெடுக்கலாம். இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த வாய்ப்பினை பெண்கள் பயன்படுத்தி தொழில்முனைவோராகி மற்ற பெண்களுக்கும் வாய்ப்புகளை வழங்கலாம்.

';

காப்பீடு மற்றும் நிதி திட்டமிடல்:

பெண்கள் தங்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க முறையான காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்வது மற்றும் நிதி திட்டமிடலை மேற்கொள்வது அவசியமாகிறது.

';

VIEW ALL

Read Next Story