யமஹா ஆர்எக்ஸ்100 ரிட்டன்ஸ்..! ஆனால் ஒரே ஒரு மாற்றம் இருக்காம்

S.Karthikeyan
Oct 15,2023
';


யமஹா நிறுவனம் தனது ஆர்எக்ஸ்100 பைக்கை மீண்டும் வெளியிடப் போவதாக நீண்ட நாட்களாக கூறி வருகிறது.

';


இப்போது அது குறித்த முக்கியமான ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த புதிய இன்ஜின் உடன் அதிக பவருடன் விற்பனைக்கு வரப்போவதாக தெரியவந்துள்ளது.

';


தற்போது அதன் இன்ஜின் பவரை 200சிசி அல்லது அதற்கு அதிகமான திறன் கொண்ட இன்ஜினை கொண்டு வடிவமைக்க யமஹா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

';


இந்த ஆர்எக்ஸ்100 பைக்கின் பழைய இன்ஜினாக இருந்தது 2ஸ்டோக் தான். ஆனால் புதிய இன்ஜின் 4ஸ்டோக் இன்ஜினாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

';


இந்த பைக் 2026ம் ஆண்டு தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்எக்ஸ்100 பைக் முதன் முதலாக 1985ம் ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது

';


அதன் பின்னர் 1996ம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. அப்பொழுது 2 ஸ்ட்ரோக் இன்ஜினிற்கு இந்தியாவில் தடை வந்தது காரணமாக இந்த பைக் நிறுத்தப்பட்டது

';


இந்த பைக் புதிதாக அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும்போது ரூ1 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம்

';


இந்த பைக்கில் டிஸ்க் பிரேக்குகள் அலாய் வீல்கள் டிசைன் மற்றும் எல்இடி ஹெட் லைட்கள் மற்றும் டி ஆர் எல் ஆகியன இருக்கும்

';


இதனால் இந்த பைக் முற்றிலும் மாடலான லுக்கிலும் அதே நேரம் பழைய கனவு தன்மையை மாற்றாமலும் மக்கள் மத்தியில் அறிமுகமாகும்

';


பழையபைக்கில் இரண்டு வீளிலும் ட்ரம் பிரேக்கர் பொருத்தப்பட்டிருந்தன. 10 லிட்டர் பெட்ரோல் டேங்க்கும் டிக் டாக் மெக்கானிசமும் இருந்தது.

';


இவை எல்லாம் மாற்றப்பட்டு தற்போது புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும்படி இந்த பைக் உருவாக்கப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story