இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தெலுங்கானா காவல் துறையில் துணைக் கண்காணிப்பாளராக (DSP) பொறுப்பேற்றார்.
2024 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய சிராஜுக்கு நிலத்துடன் அரசு வேலை தருவதாக அரசு உறுதி அளித்து இருந்தது.
அதன்படி, தெலங்கானா மாநில அரசு தற்போது டிஎஸ்பி பொறுப்பை வழங்கி கவுரவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் முகமது சிராஜ்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி இருந்தார்.
தெலங்கானா டிஎஸ்பியாக பொறுப்பேற்று இருக்கும் சிராஜிற்கு மாதம் ரூ.58850 முதல் ரூ.137050 சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சிராஜ் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தது. தற்போது சிராஜ் தனது தனிப்பட்ட திறமையால் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.
இந்திய அணிக்காக சிராஜ் இதுவரை 78 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 71 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.