ரோகித்திடம் 6 ரன்னில் தப்பித்த கிறிஸ் கெயில் உலக சாதனை
டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார்.
வெற்றி பெற்றால் இந்திய அரையிறுதிக்கு செல்லும் என்ற நிலையில், இப்போட்டியில் ரோகித் படை களமிறங்கியது
விராட் டக் அவுட்டானாலும் ரோகித் சர்மா ஆஸி பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டினார். 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் டி20 உலக கோப்பையில் பல சாதனைகளை படைத்திருந்தாலும், ஜஸ்ட் மிஸில் கிறிஸ் கெயிலின் சாதனை மிஸ் ஆனது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு கேப்டனாக அதிகபட்ச ஸ்கோர் எடுத்தவர் கிறிஸ் கெயில்.
2010ல் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக 98 ரன்கள்எடுத்திருந்தார். அந்த சாதனையை இன்று முறியடித்திருக்கலாம்.
ஆனால் ஜஸ்ட் மிஸில் அந்த சாதனையை ரோகித் சர்மாவால் முறியடிக்க முடியாமல் போனது.
டி20 உலக கோப்பை போட்டிகளில் ஒரு கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலை பார்க்கலாம்.
98 ரன்கள், கிறிஸ் கெயில் vs இந்தியா, பிரிட்ஜ்டவுன் 2010
92 ரன்கள், ரோஹித் சர்மா vs ஆஸ்திரேலியா, செயிண்ட் லூசியா 2024
88 ரன்கள், கிறிஸ் கெயில் vs ஆஸ்திரேலியா, தி ஓவல் 2009
85 ரன்கள், கனே வில்லியம்சன் vs ஆஸ்திரேலியா, துபாய் 2021