யார் இந்த ராபின் மின்ஸ்? 3.6 கோடி ரூபாய்க்கு ஏலம்
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024 ஏலத்தில் ராபின் மின்ஸ் 3.6 கோட்டி ஏலம் போனார்
21 வயதான இவரை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. ரூ.20 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோதே அணிகள் ராபினை வாங்க பல அணிகள் முனைப்புக் காட்டின.
மும்பை, லக்னோ, டெல்லி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என அணிகள் போட்டியிட கோடிகள் எகிறியது. இறுதியில் ரூ. 3.6 கோடிக்கு அவரை வசப்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இத்தொடரில் கால்பதிக்கும் முதல் பழங்குடி கிரிக்கெட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ராபின் மின்ஸ்.
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்தவரான ராபின் ராஞ்சியில் உள்ள நம்கும் பகுதியில் வசித்து வருகிறார்.
இவரின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தற்போது ராஞ்சி விமான நிலையத்தில் காவலாளியாக பணிபுரிகிறார்.
இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ராபின் மின்ஸ் ஜார்க்கண்டில் பிறந்திருந்தாலும், அம்மாநில சீனியர் அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
தோனியின் தீவிர ரசிகர் இவர். எம்எஸ் தோனியின் சிறுவயது பயிற்சியாளரான சஞ்சல் பட்டாச்சார்யாவே ராபினுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் U19 போட்டிகளில் விளையாடும்போது மும்பை இந்தியன்ஸ் அணி ராபின் திறமையை உணர்ந்து அவருக்கு இங்கிலாந்தில் சிறப்பு பயிற்சி அளித்தது.