அதிக வயதில் உலக கோப்பையை வென்ற கேப்டன்கள்
இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தான் அணி 1992 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்றது. அப்போது அவருக்கு வயது 40.
1975 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பையை கிளைவ் லாயிட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. அவருக்கு வயது 31.
ஸ்டீவ் வாக் தலைமையில் ஆஸ்திரேலியா 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பையை வென்றது. அப்போது அவருக்கு வயது 34.
34 வயதான மைக்கேல் கிளார்க் தலைமையில் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்றது.
1996 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 33 வயதான ரணதுங்கா தலைமையில் இலங்கை அணி முதன்முறையாக உலக கோப்பையை வென்றது.
2003 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வாகை சூடியது. அப்போது ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு வயது 29. அவரது தலைமையில் மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. அப்போது அவருக்கு வயது 33.
2019ஆம் ஆண்டு 33 வயதான மோர்கன் தலைமையில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து உலக கோப்பையை வென்றது.
1987 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையை வெல்லும்போது, அந்த அணியின் கேப்டன் ஆலன் பார்டருக்கு வயது 32.
2011 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இந்தியா மீண்டும் உலக கோப்பையை வெல்லும்போது கேப்டன் தோனிக்கு வயது 30.