வயது ஏற ஏற எலும்புகள் பலவீனம் அடைவதால், எலும்புகள் ஆரோக்கியத்திற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்.
கால்சியம் மற்றும் பிற தாதுக்களின் சத்தை பெற, அனைத்து வகையான காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்
எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.
எலும்புகள் வலுவாக கால்சியம் மட்டுமல்ல புரதச்சத்தும் அவசியம். எனவே புரதச்சத்து நிறைந்த உணவுகளை தவறாமல் உண்ண வேண்டும்.
கால்சியம் நிறைந்த பால் பொருட்களை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் கால்சியம் சத்தை உறிஞ்சிக் கொள்ள வைட்டமின் டி மிகவும் முக்கியம். எனவே, நாளில் அரை மணி நேரமாவது சூரிய ஒளி உடலில் படும்படி கவனம் செலுத்த வேண்டும்.
எலும்புகள் வலுவாக இருக்க உடல் எடை கட்டுக்குள் இருப்பது அவசியம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.