டெஸ்ட் போட்டிகளில் இடது கை இந்திய பேட்டர்கள் 4 பேர் இரட்டை சதங்கள் அடித்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார்.
22 வயதான அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுவும் ஒரு இக்கட்டான நிலையில் அடித்துள்ளது.
இந்த சாதனையை நிகழ்த்திய 3வது இளம் இந்திய பேட்ஸ்மேன் ஆனார் ஜெய்ஸ்வால்.
ஜெய்ஸ்வால் இப்போது இரட்டை சதம் அடித்த இடது கை இந்திய வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
இதற்கு முன் 2008ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கவுதம் கம்பீர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
சவுரவ் கங்குலி 2007ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
வினோத் காம்ப்லி 1993-ல் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக இரண்டு முறை இந்த சாதனை படைத்துள்ளார்.