விஜய் அரசியலில் வெற்றி பெற வாய்ப்பில்லை - ஏன்?
நடிகர் விஜய் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
ஆனால், அவர் வெற்றி பெறுவாரா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. வரலாற்றை பார்க்கும்போது இவரும் அரசியல் களத்தில் சலசலப்பை மட்டுமே ஏற்படுத்த முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்
சித்தாந்தம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே நிலைத்திருக்கும். அதனை முன்னெடுத்து செல்ல காலத்திற்கும் தொண்டர்கள் இருப்பார்கள்.
ஆனால், தனிமனிதர்களை முன்னிறுத்தி ஆரம்பிக்கும் கட்சிகள் எப்போதும் அரசியலில் நீடித்து இருந்ததில்லை. அப்படியே சில பத்தாண்டுகள் இருந்தாலும் மற்ற கட்சிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலையே ஏற்படும்.
தமிழ்நாட்டிலேயே சிவாஜி தொடங்கி பாமக, தேமுதிக என பல கட்சிகள் தனிமனிதர்களை முன்னிறுத்தி ஆரம்பித்து அரசியலில் ஆட்சியில் அமர முடியாமலும், அழிந்தும் போய்விட்டன.
இந்த கட்சிகள் சலசலப்புகளை மட்டுமே ஏற்படுத்த முடிந்ததே தவிர, ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்ற முடியவில்லை. அதே நிலை தான் விஜய்க்கும் பொருந்தும் என்கின்றர் அரசியல் நிபுணர்கள்.
அவரை முன்னிறுத்தி கட்சி செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் ஒன்றிரண்டு தேர்தல்களில் முக்கிய பங்காற்றுவார், அதன்பிறகு அவருடைய கட்சியும் அரசியல் நீரோட்டத்தில் கலந்து விடும் என்றும் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதனால் விஜய்யின் அரசியல் எப்படிபட்டதாக இருக்கும் என்பதை காண தமிழ்நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளனர்.