தல தோனி அறிமுகப்படுத்திய சிஎஸ்கேவின் ’குட்டி தல’
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் தோனி
ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக இருந்து வந்தார்
இவரது தலைமையில் சிஎஸ்கே அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அத்துடன் பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகமுறை தகுதிபெற்ற ஒரே அணி சிஎஸ்கே மட்டுமே
அதுவும் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியும் சென்னை தான்
இப்படி பல உயரங்களுக்கு சென்னை அணியை அழைத்துச் சென்றார் தோனி.
இப்போது 42 வயதாகும் அவர், இந்த ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டுக்கு விடை கொடுக்கிறார்.
அதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துள்ளார்.
இது தோனி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்துள்ளது.