ஆதியும் அந்தமுமான சிவபெருமான் தன் அடியார்க்கும் அடியாராக திகழ்பவர். பக்தர்கள் வாழ்வில் வளம் பெற உபதேசங்கள் அருள்பவர்...
சிவபெருமான் உலகிற்கு உபதேசித்த உபதேசங்கள் எங்கு நடந்ததோ, அந்த இடங்களில் அமையப் பெற்றிருக்கும் ஆலயங்களுக்கு சென்று தரிசிப்பது வாழ்வில் வளம் பெறச் செய்யும்
ஐயன் சிவனிடம் இருந்து அம்பிகை ஞானோபதேசம் பெற்ற திருத்தலம், இங்கு சிவனின் பெயர் ஜம்புகேஸ்வரர் அன்னையின் பெயர் அகிலாண்ட நாயகி. இது பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய தலமாகும்
உமையன்னைக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்த தலம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருத்தலம் அமைந்திருக்கும் ஊர்
ஸ்ரீதட்சிணா மூர்த்தி ரூபத்தில், ஓமாம்புலியூர் என்ற தலத்தில் உமாதேவிக்கு, பிரணவப் பொருளை சிவன் உபதேசித்தார்
ஸ்ரீதட்சிணா மூர்த்தியை வழிபட்டு சுந்தரர் என்ற நாயன்மார் பஞ்சாட்சர உபதேசம் பெற்ற தலம் திருவாலங்குடி ஆகும்
பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசமாக பெற்ற திருத்தலம் சிதம்பரம் ஆகும்
பிறருக்கு சிவன் உபதேசம் செய்தால், அப்பனுக்கே பாடம் கற்றுக் கொடுத்த பிள்ளையை பெற்ற சிவபெருமான் உபதேசம் பெற்ற திருத்தலம் சுவாமிமலை ஆகும்
பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது