இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ரெக்கார்டு
2023ம் ஆண்டு முடியவிருக்கும் நிலையில் ஆண்டு முழுவதும் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளின் ரிப்போர்ட்டை பார்க்கலாம்.
இதில் அதிக வெற்றிகளைப் பெற்ற நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்து சாதனைப் படத்துள்ளது இந்தியா.
2023 ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பரை வரையுள்ள கணக்குப்படி இந்தியா 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது.
இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 27 போட்டிகளில் இந்தியா வெற்றி. அதேபோல் 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தோல்வி
அடுத்ததாக நியூசிலாந்து அணி 33 ஒருநாள் போட்டிகளில் 17 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
பங்களாதேஷ் 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி 25 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
இலங்கை 16 வெற்றிகளையும், தென் ஆப்பிரிக்கா 15 வெற்றிகளையும், இங்கிலாந்து 11 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
இந்த வெற்றிகளைக் கணக்குப்படி பட்டியலிட்டதில் இந்தியா முதலிடத்திலும், நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன.
ஓர் ஆண்டில் அதிகபட்ச வெற்றிகளை பெற்ற அணிகளின் பட்டியில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.
அந்த அணி 2003ம் ஆண்டு 30 வெற்றிகளைப் பெற்றுள்ளது.