உலக அளவில் நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சரியான உணவுமுறையை பின்பற்றி உணவு கட்டுப்பாட்டுடன் இருந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்திருக்க உதவும் காலை உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்
தயிரின் ஜிஐ அளவு மிக குறைவு. இதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவாக அமைகின்றது.
ஓட்சில் இருக்கும் பீடா க்ளூடின் இரத்த சர்க்கரை அதிகமாக இருப்பவர்களுக்கு உதவும். குறிப்பாக அதிக எடை கொண்டவர்கள் நீரிழிவு நோயை சமாளிக்க இது பெரிதும் உதவும்.
காலை உணவில் நீரிழிவு நோயாளிகள் மல்டி-க்ரெயின் இட்லியை உட்கொள்ளலாம். இதில் கம்பு, ராகி, ஓட்ஸ், சோளம் போன்ற சிறு தானியங்களை சேர்க்கலாம்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் நிரம்பிய காலை உணவு நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைக்கும்.
காலை உணவாக எதை உட்கொண்டாலும், அதில் வறுத்து அரைத்த பாதாம், முந்திரி, அக்ரூட் ஆகியவற்றின் பொடியை சேர்த்துக்கொள்ளலாம், இது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.