ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு முன்பு ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக வாய்ப்புள்ளது.
ஐபிஎல் 2024ல் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மும்பை அணியின் நிர்வாகம். இதன் காரணமாக அவர் வெளியேற கூடும்.
இந்நிலையில் பல அணிகள் ஐபிஎல் 2025ல் புதிய கேப்டனை தேடி வருகிறது. அந்த வகையில் ரோஹித் சர்மாவை சில ஐபிஎல் அணிகள் டார்கெட் செய்யலாம்.
ஐபிஎல் 2024ல் எல்எஸ்ஜி அணிக்கும் கேஎல் ராகுலுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவருக்கு பதில் ஏலத்தில் ரோஹித் சர்மாவை டார்கெட் செய்யலாம்.
டெல்லி கேபிட்டல்ஸ் முற்றிலும் ஒரு புதிய அணியை எதிர்பார்க்கிறது. இந்நிலையில் ரிஷப் பந்திற்கு பதில் அவர்கள் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம்.
ஷிகர் தவான் மற்றும் சாம் கர்ரன் தலைமையில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி, புதிய கேப்டனை தேடி வருகிறது. அவர்களுக்கு ரோஹித் போன்ற ஒருவர் தேவை.
ஐபிஎல் 2025ல் ஆர்சிபி அணி இந்திய கேப்டனை தேர்வு செய்ய உள்ளது. எனவே அதற்கு ரோஹித் சரியான தேர்வாக இருக்கலாம்.
எம்எஸ் தோனி ஓய்வை அறிவிக்க உள்ள நிலையில் அணிக்கு ஒரு சீனியர் வீரர் தேவைப்படுகிறார். எனவே ரோஹித் ஷர்மா சிறந்த தேர்வாக இருப்பார்.