7 வயதில் தொடங்கிய கிரிக்கெட் - அம்பத்தி ராயுடுவின் மறுபக்கம்!
குண்டூரைச் சேர்ந்த ராயுடு முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் விஜய் பால் வழிகாட்டுதலின் கீழ், 7 வயதில் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.
சிறப்பாக விளையாட தொடங்கிய ராயுடு 16 வயதில் ஹைதராபாத் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கினார்.
2002 ஆகஸ்டில், ஒருநாள் போட்டிகளில் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றை அவர் விளையாடினார். இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக 300+ ரன்களைத் சேஸிங் செய்யும்போது 177 ரன்கள் எடுத்தார்.
2004 U19 WC -ல் இந்திய அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தினார். அந்த அணியில் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், உத்தாபா, ஆர்.பி. சிங் போன்ற வீரர்கள் இருந்தனர்.
இந்தியா அரையிறுதியில் தோற்றது. அவர் 2002-03 சீசனில் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடினார். அந்த தொடரில் அவர் 70 சராசரியுடன் 698 ரன்கள் எடுத்தார்.
அதன்பிறகு இவருடன் விளையாடிய மற்ற வீரர்கள் போல் ராயுடு கிரிக்கெட் பயணம் சிறப்பாக அமையவில்லை. அவர் ஐசிஎல் தொடரில் விளையாடியதால் சில காலம் விளையாட தடை விதிக்கப்பட்டது
அதன்பிறகே ஐபிஎல் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அவரது முதல் ஐபிஎல் சீசன் அவரது திருப்புமுனையாக இருந்தது.
அந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அம்பதி ராயுடு மற்றும் சவுரப் திவாரி ஆகியோர் தொடர்ந்து ரன்களை குவித்தனர். ஐபிஎல் 2010ல் ராயுடு 140+ ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன்கள் அடித்தார்.
ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் மற்றும் ஆந்திரா அணிகளுக்காக விளையாடிய ராயுடு பரோடா அணிக்கு விளையாட சென்றார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் பரோடா அந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு சென்றது.
கிரிக்கெட்டில் சிறபான திறமை கொண்ட பிளேயராக இருந்தும் இந்திய அணிக்காக போதுமான சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாததால், அப்போது முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் அவரின் கனவு தகர்ந்தது