நீரேற்றம், வைட்டமின் சி அளவை அதிகரிக்கும் எலுமிச்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பல்வேறு ஆரோக்கிய குணங்களைக் கொண்டிருக்கும் எலுமிச்சை ஜூஸ் உடலுக்கு நல்லது
வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை, வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தெரிந்துக் கொண்டால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது உங்களுக்குப் புரியும்
உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும், செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம், தினசரி காலையில் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் எலும்புகள் பலவீனமாகலாம், புற்றுநோய் ஆபத்து என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணங்களைக் கொண்ட எலுமிச்சம் பழத்தின் ஜூஸ், எப்போது பிரச்சனைக் கொடுக்கும்?
எலுமிச்சையில் உள்ள அமிலம் உணவுக் குழாயின் உள் புறத்தில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. வெறும் வயிற்றில் எலுமிச்சம்பழ நீரை குடித்தால் அது மோசமாகும்.
உடலுக்கு ஒரு டையூரிடிக் ஆக செயல்படும் எலுமிச்சை ஜூஸ், சிறுநீரகம் அதிக சிறுநீரை உற்பத்தி செய்ய காரணமாகிவிடும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும்.
எலுமிச்சை நீரில் தண்ணீர் இருந்தாலும், எலுமிச்சையின் டையூரிடிக் பண்புகளால், உடலில் விரைவில் நீர்ச்சத்து குறையும். எனவே நீரிழப்பைத் தடுக்க, நாள் முழுவதும் போதுமான அளவு நீரை குடிக்கவும்.
எலுமிச்சைக்கு அல்லது எலுமிச்சை ஜூஸ் குடித்தால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அரிப்பு, படை நோய், வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை ஒவ்வாமைக்கான அறிகுறிகள்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை