எம்எஸ் தோனி : ஓய்வுக்குப்பிறகு செய்யப்போகும் 5 வேலைகள்
எம்எஸ் தோனி இந்திய அணியின் கேப்டனாகவும், சிஎஸ்கே கேப்டனாகவும் முத்திரை பதித்தவர்
ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி
அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிளில் விரைவில் ஓய்வு பெற இருக்கிறார்.
அவர் தன்னுடைய கிரிக்கெட் ஓய்வுக்குப் பிறகு என்னென்ன வேலைகள் செய்யப்போகிறார் என்பதை பார்க்கலாம்
கிரிக்கெட் ஆலோகர் : கேப்டனாக மிகப்பெரிய அனுபவம் பெற்றிருக்கும் தோனி தொடர்ச்சியாக இளம் வீர ர்களுக்கு கிரிக்கெட் நுணுக்கங்களை ஐபிஎல் போட்டிகளின்போது கற்பிக்கிறார். அதனால் இந்த அணி அவருக்கு பொருத்தமாக இருக்கும்.
விக்கெட் கீப்பிங் பயிற்சியாளர் : சர்வதேசம் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக பல்வேறு சாதனைகளை வைத்திருக்கும் தோனி, விக்கெட் கீப்பர் பயிற்சியாளராக முடியும்.
இந்திய அணி பயிற்சியாளர் : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தோனிக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதற்கு தோனி மனது வைத்தால் போதும், பிசிசிஐ சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராகவே இருக்கும்.
சிஎஸ்கே இயக்குநர் : ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஊனும் உயிராக தோனி இருந்திருப்பதால், ஓய்வுக்குப் பிறகு அந்த அணியின் நிர்வாக இயக்குநராக செயல்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
நிர்வாகி : தோனி ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்லாது சிறந்த நிர்வாகியுமாக இருப்பதால் கிரிக்கெட் ஓய்வுக்குப் பிறகு பிசிசிஐ அல்லது ஏதேனும் கிரிக்கெட் அணிக்கு முழு நேர நிர்வாகியாக செயல்படவும் வாய்ப்பு இருக்கிறது.