விஜயதசமி 9ம் நாளில் என்ன பூஜை? சரஸ்வதி பூஜைக்கும் ஆயுதபூஜைக்கும் உள்ள ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்!

Malathi Tamilselvan
Oct 11,2024
';

நவராத்திரி

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நேர்மறையான சக்திகளும் ஒன்றுகூடும் காலம் நவராத்திரி. இரவு பகல் பாராமல் எக்கணமும் சக்திமயமாய் ஒளிர்கிறார் அன்னை ஆதிபராசக்தி

';

ஆதிபராசக்தி

தீமைகளை அழித்திட, உலகை காத்திட ஆக்கப்பூர்வமான சக்திகள் எல்லாம் ஒன்றிணைந்து, அழிவுசக்திகளை அழிக்கும் காலம் நவராத்திரி காலம்

';

போர்

நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்த நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையாக இந்துக்கள் அனுசரிக்கின்றனர்

';

துர்கா பூஜை

புராணங்களின்படி, தீய அசுரர்களை உலகிலுள்ள சக்தி ஆயுதங்களால் அன்னை துர்கை வெற்றி கொண்ட நாள் துர்கா அஷ்டமி

';

ஆயுத பூஜை

எடுத்த காரியம் முடித்த அன்னை, ஏந்திய அனைத்து ஆயுதங்களையும் கைவிட்டார். அன்னையால் கையாளப்பட்ட அந்த ஆயுதங்களுக்கு பூஜை செய்து, தீமைகளை ஒழித்ததற்கு நன்றி கூறுவதற்காக ஆயுத பூஜை அனுசரிக்கப்படுகிறது

';

சரஸ்வதி பூஜை

நவராத்திரியின் 9 நாட்களில் இறுதி மூன்று நாட்கள் அன்னை சரஸ்வதிக்கு உரியது. அதில் இறுதி நாளான நவமியன்று, சரஸ்வதியை பூஜிக்கிறோம்

';

பூஜை

அசுரர்கள் இருந்த காலத்தில் போர் ஆயுதங்கள் மூலம் தீமைகளை அழித்தார் அன்னை. இன்றைய காலத்தில், அறியாமை என்ற தீமையை விலக்கும் கல்வியை, கல்விக்கு அன்னையான சரஸ்வதியை பூஜிக்கிறோம்.

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story