மனக் குழப்பத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
மனம் குழப்பமாக இருக்கும்போது எல்லாமே தவறாக நடக்கும்
உங்களுக்குள் எரிச்சல், கோபம், எல்லோரிடமும் சண்டை போடுவீர்கள்
நிம்மதியான தூக்கம் இருக்காது, எதையாவது யோசித்துக் கொண்டிருப்பீர்கள்
இப்படியான வாழ்க்கை முறையில் இருந்து நீங்கள் விடுபட நினைக்கிறீர்களா?
தினமும் அமைதியான இடத்தில் குறிப்பிட்ட நேரத்தை செலவிட்டு தியானம் செய்யுங்கள்
எல்லா சூழ்நிலைகளையும் அமைதியாக கடப்பது என தீர்க்கமாக முடிவெடுத்துக் கொள்ளுங்கள்
உடனுக்குடன் பேசாமல் அடுத்தவர் பேசுவதை நிதானமாக கவனித்து பொறுமையாக பதில் சொல்லுங்கள்
எது உங்களால் செய்ய முடியும், அந்த விஷயத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவும்
எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்
மனதில் எப்போதும் நல்ல விஷயங்களை பற்றியே நினைத்துக் கொள்ளுங்கள்
உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வேலைகளில் அதிக கவனம் கொடுக்கவும்