அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப இவர் பலன்களை அளிப்பதால், நீதியின் கடவுள் என அழைகப்படுகிறார்.
சூரியனின் மகனாக இருப்பதால் இவர் ரவிபுத்திரன் என்றும் அழைக்கப்படுகிறார். இது தவிர ஜடாதரன், ஆயுள் காரகன், மந்தன், மகேசன், தர்மாதிகாரி, என இவருக்கு பல பெயர்கள் உள்ளன.
சனி பகவானுக்கு அனைவரும் சமமே. அவர் எப்போதும் பாரபட்சம் காட்டுவதில்லை. இருப்பினும், ஜோதிட ரீதியாக சில ராசிக்காரர்களை சனி பகவானுக்கு கூடுதலாக பிடிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷ ராசிக்காரர்கள் இவரது செல்லப்பிள்ளைகள். சனி பெயர்ச்சி காலத்திலும், ஏழரை சனி காலத்திலும் சனி பகவான் இவர்களது பிரச்சனைகளை குறைத்து நல்ல பலன்களை அதிகமாக்கி அருள் பொழிகிறார்.
சனி பகவானுக்கு மிக பிடித்தமான ராசிகளில் துலாம் ராசி மிக முக்கியமானது. துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள். ஆகையால், துலாம் ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சுக்கிரனின் அருள் எப்போதும் பன்மடங்காக கிடைக்கிறது.
கடின உழைப்பாளிகளாக இருப்பதால் மகர ராசிக்காரர்களை சனி பகவானுக்கு எப்போதும் பிடிக்கும். இவர்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதை அவர் உறுதி செய்கிறார்.
பெரும்பாலும் நிதி நிலையில் வலுவாக இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் ஈகையிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள், இதன் காரணமாக சனி பகவான் அவர்களுக்கு அருள தவறுவதில்லை. கும்ப ராசிக்காரர்கள் மீது ஏழரை சனி, சனி பெயர்ச்சி ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக இருக்காது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.