சூரியன் கடவுளாக வணங்கப்படும் நவகிரகங்களில் ஒன்று
சூரியனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நவகிரகங்களில் பிரதானமானவர் சூரியன்
சூரியன், கடவுளாக வழிபடப்பட்டாலும் அவருக்கு தெய்வம் என்ற அந்தஸ்து இல்லை. அவர் தேவர்களில் ஒருவர்
மந்திரங்களில் உன்னதமானது காயத்ரி மந்திரம் என்று சொல்வார்கள். காயத்ரி மந்திரத்தை சொல்லி காலையில் அர்க்யம் விடுவது பிராமணர்களின் வழக்கம்
சூரியனுக்கு பல இடங்களில் கோவில்கள் உண்டு. அதில் கோனார்க் சூரியன் கோவிலும், திருமங்கலக்குடி சூரியனார் கோவிலும் முக்கியமானவை
மனு, எமன், தேவர்களின் மருத்துவர்கள் அஷ்வினி தேவர்கள், கர்ணன், சுக்ரீவன் என பல புகழ்பெற்ற புராண மாந்தர்களின் தந்தை சூரியன் என்று புராணங்கள் குறிப்பிடுகிறது
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது