அம்மனுக்கு நன்றாக அலங்காரம் செய்வது தான் வரலட்சுமி விரதத்தின் முக்கியமான அம்சமாகும். அழகுபடுத்தி பார்த்துக் கொள்வது அன்னைக்கும் பிடிக்குமாம். அம்மனை நன்கு அலங்கரித்த பிறகே பூஜை செய்ய வேண்டும்
அம்மனை பட்டுத்துணியால் அலங்கரிக்க வேண்டும். வெள்ளை கறுப்பு நிறத்தை தவிர்க்கவும். மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் உள்ள பட்டுத்துணியால் அம்மனை அலங்கரித்தால் சிறப்பு.
அம்மனை கலசத்தில் வைத்து கலசத்திற்கு அலங்காரம் செய்ய வேண்டும்
வரலட்சுமி பூஜையில் அம்மனை வீட்டுக்கு அழைத்தல் என்பது முக்கியமான சம்பிரதாயமாகும். வீட்டிற்கு வரும் செல்வ மகளை நன்றாக வரவேற்று உபசரித்தால் தானே, வீட்டில் தங்குவார்?
வரலட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்
வரலட்சுமி பூஜை செய்வதற்கு ஆடம்பரம் தேவையில்லை. பக்தி சிரத்தையுடன் அன்னையை வழிபட்டால் வரம் அனைத்தையும் வரமகாலட்சுமி தந்தருள்வார்
வடை, சர்க்கரை பொங்கல், பாயசம், அப்பம், கொழுக்கட்டை, சித்திரன்னங்கள் என அன்னைக்கு செய்யும் நைவேத்தியங்களும் விதவிதமாய் இருக்கட்டும்
வரலட்சுமி பூஜை முடிந்ததும், அம்மனுக்கு சாற்றியிருக்கும் மஞ்சள் சரடை கட்டுக் கொள்ள வேண்டும்