தபால் நிலைய சிறுசேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமான திட்டங்களில் தொடர் வைப்பு அதாவது ரெக்கரிங் டெபாசிட் திட்டமும் ஒன்றாகும். இதில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து முதலீட்டாளர்கள் 8 முதல் 10 லட்சம் வரையிலான மொத்தத் தொகையை திரும்பப் பெறலாம்.
மெச்சூரிட்டி காலம் ஐந்து ஆண்டுகள். இதை முதலீட்டாளர்கள் விரும்பினால் பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். 100 ரூபாய் முதல் முதலீட்டை தொடங்கலாம். இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு ஏதுமில்லை.
தொடர் வைப்பு திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் முதலீடு செய்தால், மெச்யூரிட்டியின் போது அதாவது ஐந்தாண்டுகளில் மொத்தம் மூன்று லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் 6.7 சதவீத வட்டி கிடைக்கிறது. வட்டியிலிருந்து மட்டும் 56,830 ரூபாய் கிடைக்கும்.
வட்டியுடன் சேர்த்து மொத்த தொகையாக ரூ.3,56,830 என்ற மிகப்பெரிய தொகையை முதலீட்டாளர் திரும்ப பெறலாம்.
ஐந்தாண்டு காலத்தை நீட்டித்து 10 ஆண்டு காலமாக மாற்றினால் திட்டத்தின் முடிவில் முதலீட்டாளர் ஆறு லட்சம் ரூபாயை பெறுவார்.
இதிலும் 6.7 சதவீத வட்டியின் அடிப்படையில் வட்டியாக மட்டும் 2, 54,272 ரூபாய் கிடைக்கும்.
அந்த வகையில் 10 ஆண்டுகள் முடிந்த பின் மொத்த தொகையாக முதலீட்டாளர்களுக்கு ரூ.8,54,272 கிடைக்கும்.