பக்தர்கள் அழைத்தால் திருமால் எந்த நொடியும் செல்லலாம் என்பதால் கருடன் வாகனமாக எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்
விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். பெருமாள் கோவிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.
பல்வேறு விதமான வாகனங்களில் மகாவிஷ்ணு அருள்பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளுவது சிறப்பானது என்பதும் கருடன் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார் என்பதும் கருடனுக்கு வைணவ சம்பிரதாயம் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ள போதுமானது
வானத்தில் கருடன் வட்டமிடுவதும், சப்தமிடுவதும் சுபமானதாக கருதப்படுகிறது. கோவிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, நேர் மேலே கருடன் வட்டமிடுவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது
கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்வதால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.
கருடனை திங்கட்கிழமைகளில் தரிசித்தால் துன்பங்களும், துயரங்களும் விலகி இன்பமான மற்றும் சுகமான வாழ்க்கை அமையும்.
கருடனை செவ்வாய்க்கிழமைகளில் தரிசித்தால் துணிச்சலும் தைரியமும் உண்டாகும்
கருடனை புதன்கிழமைகளில் தரிசித்தால் பகை நீங்கும், செய்யும் செயலில் வெற்றி உண்டாகும்.
கருடனை வியாழக்கிழமைகளில் தரிசித்தால் நீண்ட ஆயுளும், செல்வங்களும் கிடைக்கும்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் அன்னை மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும்