கண்ணன், தனது மனதை மயக்கிய ராதையுடன் இன்றும் இரவில் மதுராவிற்கு வந்து நடமாடுகிறார். அந்த நடனத்தைப் பார்த்தால் பார்வை பறிபோய்விடும்.... மர்மமான பிருந்தவனத்தின் ரகசியம்...
கண்ணனுக்கு பிடித்த துளசி, காடாக வளர்ந்து இருக்கும் பிருந்தாவனம், கண்ணன் மனித அவதாரமாக வாழும்போது மிகவும் ரசித்து, விரும்பி மகிழ்ச்சியுடன் ராதையும் நடனமாடி களித்த இடம்
பல யுகங்கள் கடந்தாலும் கண்ணன், தனது மனதைக் கவர்ந்த ராதையுடன் சேர்ந்து பிருந்தாவனத்தில் இரவில் ஆனந்த நடனம் ஆடுகிறார்
பிருந்தாவனத்தை சுற்றி உள்ள இடங்களில் இரவில் நடனமாடும் ஒலியும், புல்லாங்குழலில் ஓசையும் கேட்கிறதாம்
பிருந்தாவனத்தில் உள்ள ரங் மஹால் கோவிலில் கிருஷ்ணரை வணங்க மக்கள் வருகின்றனர். இந்த ரங் மஹாலில் கண்ணனுக்கு படுக்கையறை தயார் செய்யப்பட்டுள்ளது
ரங் மஹால் படுக்கையறையில் இரவில் வைக்கும் பொருட்கள் எல்லாம், காலையில் கலைந்து இருக்கும். ராதையும் கண்ணனும் பிருந்தாவனத்தில் ஆனந்தமாய் நடனமாடி களைத்து இங்கு படுத்து உறங்குவதாக மக்கள் கூறுகின்றனர்
காலையில் பார்த்தால், படுக்கையறையில் வைக்கப்பட்ட பொருட்கள், யாரோ பயன்படுத்தியபோல கலைந்திருக்குமாம். இரவில் நடமாட்டம் இருப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்
ஆர்வத்தால், யாரவது அந்த பகுதிக்கு சென்றால், அவர்களது பார்வை பறிபோய்விடுவதாக கூறுகின்றனர். கோகுலாஷ்டமியை முன்னிட்டு, பகலில் ரங் மஹல் கோவிலுக்கு பலரும் சென்று வணங்கி வருகின்றனர்
இன்றுவரை பிருந்தாவனத்தின் இந்த மர்ம முடிச்சு அவிழவில்லை. அதுமட்டுமல்ல, பிருந்தாவனத்தில் உள்ள மண் வறண்டு போயிருக்கும், மரங்கள் காய்ந்து போயிருக்கும், ஆனால், துளசி இலைகள் மட்டும் பசுமையாய் இருக்கும்...