வீடுகளில் விளக்கேற்றுதல் என்பது தொன்றுதொட்டு வரும் மரபு. இந்து மதம் விளக்கேற்றுவதை ஆக்கப்பூர்வமானதாகவு, சுபிட்சத்தை கொண்டு வரும் முக்கியமான விஷயமாக கருதுகிறது
வீட்டிற்கு வரும் மருமகளை ‘குடும்ப குத்துவிளக்கு’ என்றும், குழந்தைகளை குல விளக்கு என்று சொல்வது விளக்கேற்றுதவதன் முக்கியத்துவத்தை சொல்கிறது
விளக்கேற்றுவதால் பல நோய்கள் போகும் என்பது நம்பிக்கை. தீபத்தை ஏற்றி விட்டு, அதில் இருந்து வரும் ஒளியை தொடர்ந்து சிறிது நேரம் கவனமாக பார்த்தபடி வேண்டுதல்களை வைக்கிறோம். தினசரி காலை மாலையில் குறிப்பிட்ட நேரம் தீபத்தை மனம் குவிய பார்ப்பது கண்களுக்கு நல்லது
தீபத்தை தொடர்ந்து மனம் குவித்து பார்ப்பது ஒரு வகையில் மனதிற்கு கொடுக்கும் பயிற்சியாக பார்க்கப்படுகிறது. மனம் ஒன்றுவதும், கவனம் கூடுவதும் இதன் பயனாக ஏற்படும்
வருத்தம், துக்கம் துயரம் என பல கவலைகளையும் நீக்கி மனகேதத்தை ஆற்றுவதற்கு தினசரி வீட்டில் ஏற்றும் தீபம் உதவும்
தீபத்தை காலை மாலை என இருவேளைகளில் ஏற்றி, அதில் மனம் ஒன்றுவது மன அழுத்தங்களைப் போக்கும் மாமருந்தாக செயல்படும்
சூரியன் உதிக்கும்போதும், மறையும் போதும் விளக்கேற்றுவது நல்லது
அரிசி மாவில் நெய், வெல்லம் கலந்து தீபமாக செய்து, அதில் திரி போட்டு நெய் விளக்கு ஏற்றுவது வீட்டிற்கு தெய்வத்தை வரவழைப்பதற்கான அபயமாக கருதப்படுகிறது
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது