நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் மக்களிடம் எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளன.
அனைத்து துறைகளும் தங்கள் கோரிக்கைகளை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளன. இது தொடர்பாக நிதி அமைச்சர் (Nirmala Sitharaman) பல்வேறு துறைகளில் பிரதிநிதிகளை சந்தித்தார்.
இந்த பட்ஜெட்டில் அடல் பென்ஷன் திட்டத்தை மேலும் சிறப்பானதாக மாற்றுவதற்காக சில யோசனைகள் முன்வைக்கப்பட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015 பட்ஜெட்டில் APY திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை பயன்படுத்தி ஒருவர் ஓய்வு காலத்திற்கு தேவையான வருமானத்தை பெற முடியும்.
18 வயது முதல் 40 வயது வரையிலான யார் வேண்டுமானாலும், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் அதிகபட்ச ஓய்வூதியத் தொகை தற்போது ரூ.5,000 ஆக உள்ளது.
இந்த பட்ஜெட்டில் அரசு ஓய்வூதியத் தொகையை இரு மடங்காக்கி, அதாவது ரூ.10,000 ஆக உயர்த்தி அரசு அறிவிக்கக்கூடும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், உதவித்தொகை இரட்டிக்கப்படக்கூடும் என கூறப்படுகின்றது.