நவராத்திரியில், கிரக தோஷங்களை நீக்க செய்ய வேண்டிய வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களைத் தெரிந்துக் கொள்வோம். எந்த மந்திரம் சொல்லி எந்த கடவுளை வழிபட வேண்டும்?
சூரிய கிரக தோஷத்திலிருந்து விடுபட, 'ஓம் கிரிணி: சூர்யாய நம' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். ஞாயிற்றுக் கிழமையில் கோதுமை, வெல்லம், தங்கம், செம்பு, மாணிக்கம் போன்றவற்றையும் தானம் செய்யுங்கள்.
'ஓம் சன் சோமே நமஹ்' என்ற மந்திரத்தை நவராத்திரியில் சொல்லி வழிபடுவதும். பால், அரிசி, வெள்ளி, நெய், சர்க்கரை, சங்கு போன்ற வெண்மையான பொருட்களை தானம் செய்வதும், சந்திர தோஷத்திலிருந்து நிவாரணம் பெற உதவும்.
செவ்வாய் தோஷத்திலிருந்து நிவாரணம் பெற, 'ஓம் அங்கரகாய நம' என்ற மந்திரத்தை உச்சரிப்பதுடன் இரத்த தானம் செய்வது நல்லது. அதேபோல, தாமிரம், தங்கம், வெல்லம் மற்றும் பவளம் என பல பொருட்களை நவராத்திரியில் தானம் செய்யலாம்
நவராத்திரியின் போது 'ஓம் பும் புதாய நம' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். வெண்கலப் பாத்திரங்கள், கற்பூரம், நெய், பச்சை வஸ்திரங்கள் தானம் செய்வது, புதன் தோஷத்திலிருந்து விடுபட உதவும்
'ஓம் பிரிம் பிருஹஸ்பத்யே நமஹ' என்ற மந்திரத்தை நவராத்திரியில் உச்சரித்தால், குரு தோஷத்திலிருந்து நிவாரணம் பெறலாம்
பணம் இல்லாத ஏழையாக மாற்றும் சுக்கிர தோஷத்தில் இருந்து விடுபட, 'ஓம் ஷும் சுக்ராய நமஹ' என்று ஜபிக்கவும். வெள்ளிக்கிழமை அன்று பால், தயிர், வெள்ளி மற்றும் வெள்ளை ஆடைகளை தானம் செய்யுங்கள்.
'ஓம் ஷன் ஷனைச்சராய நம' என்ற மந்திரத்தை நவராத்திரியில் ஜபிக்கவும். இரும்புப் பொருட்கள், எருமை, கருப்பு-நீல ஆடைகள், உருளைக்கிழங்கு போன்றவற்றையும் சனிக்கிழமை தானமாக வழங்கவும்.
'ஓம் ரா ரஹ்வே நமஹ' என்று ஜபித்து வந்தால் ராகு தோஷம் போகும், அதேபோல, கேது தோஷத்திலிருந்து விடுபட, 'ஓம் கே கேத்வே நமஹ' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். நீல வஸ்திரம், தானியங்கள், கருப்பு எள், எண்ணெய், இரும்பு போன்றவற்றை தானம் செய்தால் ராகு மற்றும் கேது தோஷங்கள் நீங்கும்
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது