இந்து மத நம்பிக்கைகளின்படி, அமாவசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்கள் மனம் குளிர்வார்கள்....
தை, புரட்டாசி, ஆடி அமாவாசை நாட்களில் நதிகளிலும், கடல்களிலும் பக்தர்கள் நீராடி நீத்தார் கடன் செய்வது வழக்கம்...
நாளை, அதாவது பிப்ரவரி ஒன்பதாம் நாள் வெள்ளிக்கிழமையன்று தை அமாவசை திதி வருகிறது. இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாகும்
தட்சிணாயண பாதையில் இருந்து உத்தராயண பாதைக்கு அடி எடுத்து வைக்கும் உத்தராயணத்தில் வரும் அமாவாசை இது... முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், தீராத பிரச்சனைகள் தீரும். நமது முன்னோர்கள் மன அமைதியடைந்து ஆசி வழங்குவார்கள்
தை அமாவாசை நாளில் வீட்டை சுத்தப்படுத்தும் விளக்குமாறு வாங்கக்கூடாது. அது தரித்திரத்தைக் கொண்டுவரும் என்பது நம்பிக்கை
பக்தனுக்காக அமாவாசை தினத்தன்று முழு நிலவை வானில் உதிக்கச் செய்த சம்பவத்தை திருக்கடையூர் அன்னை அபிராமி நிகழ்த்தியது தை அமாவாசை நாளன்று தான்...
அன்னை அபிராமி, தனது காதணியை பெளர்ணமியாக்கிய அற்புதச் சம்பவம் நிகழ்ந்த நாள் தை அமாவாசை
மத நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது