நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரேயொரு கிரகம் சனிஸ்வரர் மட்டும் தான். நீதி தேவன் என்றும் அழைக்கப்படும் சூரியனின் புத்திரனான சனிக்கு கருப்பு நிறம் உகந்தது
சனீஸ்வரருக்கு உகந்த சனிக்கிழமைகளில் அவரை வழிபடுவது நல்லது. ஆனால் வழிபடும்போது, நேருக்குநேர் நின்று வணங்காமல் சனீஸ்வரரின் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும்
சனீஸ்வரருக்கு இரும்பு பாத்திரம் உகந்தது. இரும்பு பாத்திரத்தில் உணவு சமைத்து உண்பது உணவின் இரும்புச்சத்தைக் கூட்டுவதோடு, சனீஸ்வரரின் அருளையும் பெற்றுத் தரும்
நல்லெண்ண்ய் தீபம் இடுவது சனீஸ்வரரின் கருணையைப் பெற்றுத் தர உதவும்
எண்ணெய்களில் சிறந்தது எள்ளில் எடுக்கப்படும் நல்லெண்ணெய் என்றால், தாமரைத்தண்டு போட்டு திரி ஏற்றுவது நன்மைகளைத் தரும்
சனிக்கிழமையன்று விரதம் இருந்து சனீஸ்வரரை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றால், சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமையன்று நவகிரகம் உள்ள கோவிலில் 40 நிமிடங்கள் இருந்தால் கெடுபலன்கள் குறையும்
சனீஸ்வரரின் வாகனம் காகம் என்பதும், இந்து மதத்தில் காகத்திற்கு இருக்கும் முக்கியத்துவமும் அனைவருக்கும் தெரிந்ததே. காகத்திற்கு உணவிடுவது என்பது பாவங்களைப் போக்கும் அருமையான பரிகாரம் ஆகும்
இந்த கட்டுரை பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த மத நம்பிக்கை அடிப்படையிலான விவரங்கள், இடத்திற்கு இடம் மாறக்கூடியவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை