ஆகஸ்ட் 16ம் தேதியன்று சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிப்பார். சிம்மத்தில் சூரியன் பயணிக்கும் ஆவணி மாதம் மிகவும் விஷேசமானது.
சிம்மத்தில் அப்போது புதனும் பெயர்ச்சியாகி சூரியனுடன் இணைவார். சூரியனும் புதனும் இணையும்போது, ஒருவரின் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும்
சிம்மத்தில் புதன் மற்றும் சூரியனுடன் இணைகிறார் பிரபலத்தன்மையையும் வசதி வாய்ப்புகளையும் வழங்கும் சுக்கிர பகவான்
ஏற்கனவே சூரியன், புதன் சுக்கிரன் இருக்கும் சிம்ம ராசிக்கு சந்திரனும் வரும்போது நான்கு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகிறது சதுர்கிரஹி யோகம்... இந்த யோகத்தின் பலனை 3 ராசிகள் அறுவடை செய்வார்கள்
வீரத்தின் விளைநிலமான சிம்மத்தில் நான்கு ராசிகள் இணைந்து பலம் கொடுக்கும்போது, சிம்ம ராசியினருக்கு வாழ்க்கையில் செல்வாக்கும் பிரபலத்தன்மையும் சித்திக்கும்
சதுர்கிரக யோகத்தால் சிம்மத்திற்கு அடுத்து நல்ல பலன்களை பெறப் போவது விருச்சிக ராசி தான். நான்கு கிரகங்களின் சுபப்பார்வையும் விருச்சிகத்தின் மீது விழுகிறது
சதுர்கிரக யோகத்தினால் வியாபாரம் தொழில் விருத்தி, திடீர் பணவரவு, தடங்கல்களை சந்தித்து வந்த காரியங்கள் நடைபெறுவது என தனுசு ராசியினரும் மகிழ்ச்சியில் திளைப்பார்கள்
பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது