இந்த ஸ்மார்ட்போன் Poco M6 5G க்கு அடுத்ததாக வெளி வந்திருக்கும் போன் ஆனால், மற்றும் Poco M6 Pro ஐ விட கொஞ்சம் தான் விலை அதிகம். இருந்தாலும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது
டூயல்-டோன் வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த போனில், 120Hz திரை, 108MP திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட் போன்ற அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன
Poco M6 Plus 5G 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.13,499 என்றால், 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.14,499.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்கினால் 1,000 ரூபாய் வங்கி தள்ளுபடி கிடைக்கும். அதேபோல 1,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும்
கிராஃபைட் பிளாக், ஐஸ் சில்வர் மற்றும் மிஸ்டி லாவெண்டர் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.
என்ற பிரிவில் வரும் Poco M6 Plus 5G போன், Realme Narzo 70 5G, Oppo K12x 5G, CMF ஃபோன் 1, Poxo X6 நியோ மற்றும் மோட்டோரோலா Moto G64 5G போன்றவற்றுடன் போட்டியிடுகிறது
ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 5 மதியம் 12 மணிக்கு Flipkart மற்றும் Poco India இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்
செல்ஃபிக்காக பஞ்ச் ஹோலில் வைக்கப்பட்டுள்ளது. 108MP பிரதான லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ யூனிட்டுடன் பின்புறத்தில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. பின்புற கேமரா மற்றும் முன் கேமரா 1080p வீடியோக்களை படமெடுக்கும் திறன் கொண்டது.
Pocoவின் இந்த போன் Android 14 OSவில் இயங்குகிறது, 2 வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் 4 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் கொண்டது