ஜோதிடத்தில் சில ராசிகள் பற்றி குறிப்பிடுகையில், சில ராசிக்கு சொந்தக்காரர்கள், தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள் என்றும், பனத்தை சேமிக்கும் எண்னமே இருப்பதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
சில ராசிக்காரர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லலாம். பணம் அவர்களிடம் நிலைக்காது. பணத்தை தண்ணீரைப் போல் செலவு செய்யும் இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மிதுன ராசிக்காரர்கள் பணத்தை தண்ணீரை போல் செய்வார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கை வசதி மற்றும் உணவுக்காக நிறைய பணம் செலவழிப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கும் தயக்கம் இன்றி செலவு செய்கிறார்கள். அதனால் தான் சில நேரங்களில் பணம் அவர்களிடம் நிலைக்காது.
சிம்ம ராசிகளுக்கு ஆடம்பர வாழ்க்கை முறை மிகவும் பிடிக்கும். இந்த மக்கள் தங்களுக்காக நிறைய பணம் செலவழிக்கிறார்கள். பல சமயங்களில் இந்தப் பழக்கத்தால் இவர்களும் கடனாளிகளாகி விடுகிறார்கள்.
துலா ராசிக்காரர்கள் மிகவும் விலையுயர்ந்த பொழுதுபோக்குகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் தமக்கு மட்டுமின்றி தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பொழுது போக்கிற்காகவும் பணத்தை செலவிடுகின்றனர்.
விருச்சிக ராசியின் பிறரைப் பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வாழ்கிறார்கள்; பணத்தை செலவு செய்யும் விஷயத்தில் இவர்கள் சற்றும் பின்வாங்குவதில்லை.
கும்ப ராசிக்காரர்கள் தங்களின் பெருமையை காட்ட நிறைய செலவு செய்கிறார்கள். சமுதாயத்தில் தங்களின் அந்தஸ்தை நிலைநிறுத்த, இவர்கள் பணத்தை தண்ணீராக செலவழிக்கிறார்கள்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.