தமிழகத்தில் கோலாகலமாக அனுசரிக்கப்படுவது. இந்த மாதத்தில் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது
இந்துக்கள், ஆடி மாதத்தில், அன்னை சக்தியை வழிபடுவதை தொன்று தொட்டு கடைபிடித்து வருகின்றனர்
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதேபோல, ஆடிப்பூரம், ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை, ஆடி பிறப்பு, ஆடி 18, ஆடி பெருக்கு என பல பண்டிகைகள் இந்த மாதத்தில் கொண்டாடப்படுகின்றன
கடக ராசிக்கு சூரியன் மாறுவதால் ஆடி மாதம் பிறக்கிறது
ஆடியில் அன்னையின் தாள் பணிந்து அடைக்கலம் புகுந்தால், குடும்பத்தில் நிம்மதி நீடித்து நிலைக்கும்
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் கன்னிப் பெண்களும், சுமங்கலிகளும் அன்னையை வழிபடுவார்கள்
ஆடி மாத வழிபாட்டால், திருமண பாக்கியத்தையும், குழந்தைப் பேற்றையும் பெறலாம்
இந்தியாவில் வீடுகளிலும் ஆலயங்கலிலும் இன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன
ஆடியில் அன்னதானமும், கூழ் ஊற்றுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது