ஏகாதசி விரதம் விஷ்ணு பகவானுக்கு மிகவும் பிரியமான நாளாகும்.ஏகாதசி அன்று விரதம் இருப்பதன் மூலம் வாழ வைக்கும் கடவுளின் அருளால் வாழும் வரை நிம்மதியாக வாழலாம்
இந்த விரதம் ஒன்று இருந்தால் போது, எஞ்சிய மற்ற விரதங்கள் எல்லாம் இருந்ததன் பயன் கிடைத்துவிடும். ஆனால், இந்த விரதத்தைத் தவிர பிற விரதங்கள் இருந்தாலும், அது ஏகாதசி விரதத்தின் பலனைக் கொடுக்காது
பௌர்ணமியிலிருந்து 11வது நாளில் வந்துள்ள இன்றைய ஷட்டில ஏகாதசி தை மாதத்தின் கடைசி ஏகாதசி விரதமாக வந்துள்ளது
ஏகாதாசி நாளன்று காலையில் குளித்ததும், விளக்கேற்றி விஷ்ணுவை வணங்க வேண்டும்
ஏகாதசி விரதம் இருப்பவர்கள், தானிய உணவுகளை உண்ணக்கூடாது. சிலர் ஒரு வேளை மட்டும் உணவு உண்பார்கள், சிலர் பழங்களை மட்டும் உண்பார்கள்
ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று சூரியன் மறைவதற்குள் உணவு உட்கொண்டு ஏகாதசி விரதத்தை தொடங்க வேண்டும்
ஏகாதசி நாளைக்கு அடுத்த நாளான துவாதசி நாளன்று காலையில் துவாதசி பாரணை உண்பதுடன் ஏகாதசி விரதம் பூர்த்தியடையும்
துவாதசியன்று உண்ணும் உணவில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இடம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு துவாதசி பாரணை என்று பெயர் உண்டு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்தவை. விரதங்களும், உணவு உண்ணும் முறையும் அவரவர் வழக்கத்திற்கும் நம்பிக்கைக்கும் ஏற்றவாறு மாறுபடும்