ஆப்பிளின் அடுத்த மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமின் லேட்டஸ்ட் பதிப்பான iOS 18, நாம் iphone ஐ பயன்படுத்தும் விதத்தையே முற்றிலுமாக மாற்றி விடும்
ஐபோன் 16 -இன் அறிமுகத்துடன் இந்த ஆண்டு இறுதி முதல் இந்த ஐபோன் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட சிரி மற்றும் மேம்பட்ட AI அம்சங்கள் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
iOS 17.4 அப்டேட்டுடன் ஐரோப்பாவில் தர்ட் பார்டி சைட்லோடிங் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
புதிய அம்சத்தின் மூலம் சப்ஸ்கிரிப்ஷன் கட்டணங்கள் 30% வரை குறையக்கூடும் என்றும் கூறப்படுகிறது
இந்த புதிய பதிப்பில் வெப் ப்ரவ்சர் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இந்த ஐபோனில் வரும் புதிய அம்சங்களின் மூலம் பயனர்கள் மல்டிமீடியா பைல்கள் மற்றும் இன்னும் பலவற்றை பிறருக்கு எளிதாக அனுப்பவும் பெறவும் முடியும்.