இரவில் தூங்கும் முன் பாதத்தில் தேங்காய் எண்ணெய் தடவி படுத்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்
தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து அதில் காலை 15 நிமிடங்களுக்கு வைத்துக்கொள்ளவும். இப்படி செய்வது வெடிப்புகளை போக்கலாம்.
எலுமிச்சை சாறை பாதங்களில் தடவி, 10 நிமிடம் அப்படியே விட்டு பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும்
இரவில் பாதங்களில் ஆலிவ் எண்ணெய் கொண்டு நன்றாக மசாஜ் செய்து சாக்ஸ் அணிந்து உறங்கினால், பாதங்கள் நீரேற்றமாக இருக்கும்.
ஓட்சையும் தேனையும் கலந்து காலில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும்
வெதுவெதுப்பான நீரில் வினிகரை கலந்து காலை அதில் வைத்து ஊற வைக்கவும். இது பாதங்களை மிருதுவாக்கும்
பழுத்த வாழைப்பழத்தை காலில் தடவி அப்படியே ஊற வைக்கவும். பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும்
கற்றாழையை காலில் தடவி 20 நிமிடத்திற்கு அப்படியே ஊற வைக்கவும். பின்னர் இதை மசாஜ் செய்யவும். பாதம் மிருதுவாக்கும்.